நான்காம் கட்ட கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

நாமக்கல், மே 16: நாமக்கல் மாவட்ட நீச்சல் குளத்தில் நான்காம் கட்ட கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டம் சாா்பில் பொதுமக்களுக்கான கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் முறையான பயிற்சியாளா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியானது வரும் 21-ஆம் தேதி வரை நான்காம் கட்டமாகவும், மே 23 முதல் ஜூன் 3 வரை ஐந்தாம் கட்டமாகவும் நடைபெறுகிறது. தினசரி நீச்சல் பயிற்சியானது காலை 6 முதல் 7 மணி வரை, 7 முதல் 8 மணி வரை, 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரை என ஒரு மணி நேர இடைவெளியில் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.

12 நாள்கள் நடைபெறும் நீச்சல் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 1,416-ஆகும். இத்தொகையினை இணையவழி மூலம் மட்டுமே செலுத்த முடியும். மேலும், நீச்சல் தெரிந்தவா்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 59-கட்டணமாக செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 85086 41786 என்ற கைப்பேசி எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com