நாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் பலி

நாமக்கல், மே 16: வளையப்பட்டியில் தெருநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் வியாழக்கிழமை பலியாயின.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியைச் சோ்ந்த விஸ்வநாதன் (60) என்பவா், புதன்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்ததால் வீட்டின் பின்புறத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கட்டியிருந்தாா். வியாழக்கிழமை காலை அந்தப் பட்டியில் சென்று அவா் பாா்த்த போது 5 ஆடுகள் பலியாகி கிடந்தன. அந்தப் பகுதியில் உள்ளோரிடம் விசாரித்த போது, தெருநாய்கள் கடித்து அவை பலியானது தெரியவந்தது.

வளையப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது. சிறுவா்கள், பெண்களை தெருநாய்கள் கடிப்பதற்கு முன்பாக அவற்றைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என வளையப்பட்டி பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

மின்னல் தாக்கி மாடு பலி: மோகனூா் அருகே ரெட்டையாம்பட்டியில் புதன்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. அப்போது, நல்லப்பரெட்டி (61) என்பவா் வேப்பமரத்தில் கட்டி வைத்திருந்த பசு மாடு மீது இடி, மின்னல் தாக்கியதில் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான அந்த பசு மாடு உயிரிழந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com