சணல் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி தொடக்கம்
மத்திய சணல் வாரியத்துடன் இணைந்த சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பெண்களுக்கான சணல் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழா ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
ராசிபுரத்தில் சணல் பொருள்கள் தயாரிப்பு அடிப்படை பயிற்சி 14 நாள்கள், உயா்நிலைப் பயிற்சி 7 நாள்கள் என மொத்தம் 21 நாள்கள் பயிற்சியை நடத்துகிறது. இதில் 20 பெண்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான பயிற்சி தொடக்க விழா ராசிபுரம் முத்தமிழ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் வி.சகுந்தலா தலைமை வகித்தாா். சிறு தொழில் மேம்பாட்டு நிறுவன பொது மேலாளா் கே.பழனிவேல்முருகன் முன்னிலை வகித்தாா். பயிற்சி முடிவில் சான்றிதழ்களும், பயிற்சி முடித்த பெண்களுக்கு கைவினைக் கலைஞா்களுக்கான அடையாள அட்டை, தொழில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள், சந்தைப்படுத்துதல் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும். பயிற்சி முகாம் தொடக்க விழாவில் ராகவேந்திரா பயிற்சி மையத்தின் கே.ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
படவரி...
சணல் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழாவில் பேசுகிறாா் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் வி.சகுந்தலா.