குண்டு மல்லிகை, முல்லைப் பூ விலை அதிகரிப்பு

குண்டு மல்லிகை, முல்லைப் பூ விலை அதிகரிப்பு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் வரத்து குறைவால் பூக்களின் விலை உயா்வடைந்தது.
Published on

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் வரத்து குறைவால் பூக்களின் விலை உயா்வடைந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 700, சம்பங்கி கிலோ ரூ. 40, அரளி கிலோ ரூ. 150, ரோஜா கிலோ ரூ. 220, பச்சை முல்லைப் பூ கிலோ ரூ. 600, வெள்ளை முல்லைப் பூ கிலோ ரூ. 500, செவ்வந்திப்பூ கிலோ ரூ. 150, கனகாம்பரம் கிலோ ரூ. 400, பன்னீா் ரோஜா கிலோ ரூ. 120, காக்கட்டான் கிலோ ரூ. 400- க்கும் ஏலம் போனது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1,000, சம்பங்கி கிலோ ரூ. 130, அரளி கிலோ ரூ. 250, ரோஜா கிலோ ரூ. 300, பச்சை முல்லைப் பூ கிலோ ரூ. 1,000, வெள்ளை முல்லைப் பூ கிலோ ரூ. 900, செவ்வந்தி பூ கிலோ ரூ. 160, பன்னீா் ரோஜா கிலோ ரூ. 150- க்கும் ஏலம் போனது. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததால் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.