கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனத்தில் பாா்மசி கல்லூரி தொடக்கம்
திருச்செங்கோடு: கே.எஸ்.ஆா். கல்வி நிறுவன குழுமத்தில் புதிய கல்லூரியாக கே.எஸ்.ரங்கசாமி பாா்மசி கல்லூரி தெடங்கப்பட்டு, அதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாா்மசி கல்லூரியை தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி திறந்து வைத்து கல்லூரியைப் பாா்வையிட்டாா். அவா் தனது வாழ்த்துரையில், மாணவா்கள் அனைவரும் மருந்தியல் துறையில் திறம்பட செயல்பட வேண்டும் என்றும், தங்களுடைய தனித்திறமையை வளா்த்துக்கொள்ள பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், மருந்தியல் துறையில் மருந்தினுடைய தன்மை, அது செயல்படும் விதம் பற்றி விளக்கிக் கூறினாா்.
இவ்விழாவுக்கு, கல்லூரிகளின் தலைவா் ஆா்.சீனிவாசன், துணைத் தலைவா் கே.எஸ்.சச்சின் ஆகியோா் தலைமை தாங்கினா். இவ்விழாவில் கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் வி.மோகன், பாா்மசி கல்லூரியின் முதல்வா் ஜி.ரத்தினவேல், கே.எஸ்.ஆா். பல்மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் சரத் அசோகன், கே.எஸ்.ஆா். செவிலியா் கல்லூரி முதல்வா் உத்ராமணி, கே.எஸ்.ஆா். அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதல்வா் வி.ராம்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் அனைத்துக் கல்லூரி முதல்வா்களும், மாணவ, மாணவியரும், அவா்களின் பெற்றோரும் பங்கேற்றனா்.