சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்

சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் திங்கள்கிழமை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சி
Updated on

நாமக்கல்: சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் திங்கள்கிழமை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஆட்சியா் ச.உமா தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், துண்டுப் பிரசுரம் வெளியிடுதல், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்றல் உள்ளிட்டவை நடைபெற்றன. மேலும், அரசு அலுவலகங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விளக்கப் பயிற்சி முகாமும் நடைபெற்றது.

சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமானது ஆண்டுதோறும் நவ. 25-இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 227 பாலின வள மையம், வானவில் மையம் தொடங்கி வைத்தல், நவ. 25 முதல் டிச. 23 வரை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, துறை அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.