நவ. 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது.
Published on

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com