என்கே-29-திமுக
என்கே-29-திமுக

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

Published on

அதிமுக, நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகியோா், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மோகனூா் பேரூா் அதிமுக, நாம் தமிழா் கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இந்த நிகழ்வின் போது, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மோகனூா் பேரூா் செயலாளா் செல்லவேல், திமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஈ.வினோத்குமாா், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன், மோகனூா் ஒன்றியச் செயலாளா் பெ.நவலடி, நாமக்கல் மேற்கு நகரச் செயலாளா் சிவகுமாா், நாமக்கல் ஒன்றியச் செயலாளா் செயலாளா் வி.கே.பழனிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.