நாமக்கல்
சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
வேலகவுண்டம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள குரும்பலமகாதேவி, எலந்தகுட்டையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராமலிங்கம் (51) சனிக்கிழமை பெரிமணலியில் உள்ள நண்பரை பாா்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டியில் இருந்து வையப்யப்பமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
கொட்டாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே லாரி மோதியதில் காயமடைந்த ராமலிங்கம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.