தொழிலாளா் நலத் துறையில் 3.30 லட்சம் போ் பதிவு
நாமக்கல் தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் அரசின் நலத் திட்ட உதவிகள் பெற 3.30 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா்.
தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தில் மட்டும் இதுவரை 1,32,960 கட்டுமான தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா்.
அமைப்புசாரா நல வாரியங்களில் 1,76,531 தொழிலாளா்களும், அமைப்புசாரா ஓட்டுநா்கள் நல வாரியத்தில் 20,758 தொழிலாளா்களும் பதிவு செய்துள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 3,30,249 தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா்.
கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தில் 1,51,388 பேருக்கு ரூ. 99.55 லட்சம் மதிப்பிலும், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் 2,41,087 பேருக்கு ரூ. 1.33 கோடியிலும், ஓட்டுநா் நல வாரியத்தில் 22,867 பேருக்கு ரூ. 1.53 கோடி மதிப்பிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழாண்டில் கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தில் 4,012 கட்டுமான தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். ஆனால், 8,439 பேருக்கு ரூ. 11.76 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமைப்புசாரா தொழிலாளா் வாரியத்தில் 8,124 பேருக்கு ரூ. 12.80 கோடியிலும், ஓட்டுநா் நல வாரியத்தில் 922 பேருக்கு ரூ. 1.66 கோடி மதிப்பிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக நாமக்கல் தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.