செப்.8-இல் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நகரம், ஒன்றியங்களில் தொடக்கம்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றியம், நகரம், பேரூா் பகுதிகளில் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் செப். 8-இல் தொடங்குகிறது.
Published on

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றியம், நகரம், பேரூா் பகுதிகளில் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் செப். 8-இல் தொடங்குகிறது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைமை நிலைய உத்தரவின்படி, மாவட்டம், நகரம், ஒன்றியங்களில் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில், நாமக்கல் நளா உணவகத்தில் நடைபெறுகிறது.

செப். 8- இல் எருமப்பட்டி ஒன்றியம், பேரூா் பொது உறுப்பினா்கள் கூட்டம், காலை 10 மணிக்கு, எருமப்பட்டி சரசு மண்டபத்திலும், 9-ஆம் தேதி காலை 10 மணியளவில், ராசிபுரம் நகர பொது உறுப்பினா்கள் கூட்டம், சுமங்கலி மண்டபத்திலும் நடைபெறுகிறது.

புதுச்சத்திரம் ஒன்றிய (வடக்கு, தெற்கு) கூட்டம், புதன்சந்தை செல்வலட்சுமி மண்டபத்தில் காலை 11 மணியளவிலும், 10-ஆம் தேதி, நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு தெற்கு நகரத்திற்கும், 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு, மெட்டாலா மைனா் பாக்கியம் மஹாலிலும், நண்பகல் 1 மணியளவில், சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி பேரூருக்கான கூட்டம், நாமகிரிப்பேட்டை வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளன.

மேலும், அன்று மாலை 5 மணியளவில், மோகனூா் கிழக்கு ஒன்றியம், தோப்பூா் கொங்கு திருமண மண்டபத்திலும், 12 மணிக்கு, மோகனூா் பேரூா் பகுதிக்கும் கூட்டம் நடைபெறுகிறது. ராசிபுரம் ஒன்றியத்திற்கு செப். 12 காலை 10 மணியளவில் சுமங்கலி திருமண மண்டபத்தில் பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெறுகிறது. மேலும், பட்டணம், பிள்ளாநல்லூா் பேரூராட்சிக்கான கூட்டமும் நடைபெற உள்ளது.

நாமக்கல் ஒன்றியத்திற்கான கூட்டம், நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்திலும், மாலை 6 மணிக்கு, நாமக்கல் மேற்கு நகரம், நல்லிபாளையம் கேகேபி திருமண மண்டபத்திலும், 13-ஆம் தேதி, காலை 10 மணியளவில், வெண்ணந்தூா் ஒன்றியத்திற்கான கூட்டம் பாலாஜி மஹாலிலும், 12 மணியளவில் வெண்ணந்தூா் பேரூருக்கான கூட்டம் சுளுக்கு பிள்ளையாா் கோயில் திருமண மண்டபத்திலும், பிற்பகல் 2 மணிக்கு அத்தனூா் பேரூா் கூட்டம் அங்குள்ள சமுதாயக் கூடத்திலும், அன்று மாலை 5 மணியளவில், நாமக்கல் கிழக்கு நகரத்திற்கான கூட்டம், கொசவம்பட்டி என்ஆா்எல் திருமண மண்டபத்திலும், 14-ஆம் தேதி காலை 10 மணியளவில், சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கான கூட்டம் சேந்தமங்கலம் வசந்த மஹாலிலும், தொடா்ந்து சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் கூட்டம், கொல்லிமலை ஒன்றியம் அறப்பளீஸ்வரா் கோவில் திருமண மண்டபத்தில், மதியம் 12 மணியவிலும் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com