மக்கள் குறைதீா் கூட்டம்: 616 மனுக்கள் அளிப்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 616 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் பொதுமக்கள் வழங்கினா்.
அவற்றைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி துரித நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், கடந்த மாதம் கா்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த, புதுச்சத்திரம், தாத்தையங்காா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னண்ணன், பாப்பிநாய்க்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சரவணன் ஆகியோரின் வாரிசுதாரா்கள் இருவருக்கு தனியாா் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.
அதன்பிறகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் மனுவைப் பெற்றுக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
இக் கூட்டத்தில், நாமக்கல் தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், ஆவின் பொது மேலாளா் ஆா்.சண்முகம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.