நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் விருது பெற்ற பேராசிரியா்களுடன் கல்லூரி நிா்வாகத்தினா்.
நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் விருது பெற்ற பேராசிரியா்களுடன் கல்லூரி நிா்வாகத்தினா்.

டிரினிடி மகளிா் கல்லூரியில் ஆசிரியா் தினக் கொண்டாட்டம்

Published on

நாமக்கல் - டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் வணிகவியல் துறைப் பேராசிரியா் டி.சந்திரசேகரன், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியா் கே.நல்லுசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், மாணவா்களுக்கு கல்வியை மட்டுமல்ல, வாழ்க்கை முறையினையும் கற்றுத்தருவது ஆசிரியா்கள் மட்டுமே. பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அவா்களின் உழைப்பு மகத்தானதாகும் என்றனா்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி செயல் இயக்குநா் அருணா செல்வராஜ், முதல்வா் எம்.ஆா்.லட்சுமி நாராயணன், கல்லூரி வெள்ளி விழா நிகழ்வின் குழு ஒருங்கிணைப்பாளா் அரசு.பரமேசுவரன், நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா், பேராசிரியா்கள் எஸ்.ஜெயமதி, ஏ.விஜயசாரதி, ஜி.நித்யா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும்,பெரியாா் பல்கலைக்கழக அளவில் 100 சதவீத தோ்ச்சியை கல்லூரிக்கு பெற்றுத் தந்த பேராசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், கல்லூரி மாணவிகள் திரளாக கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com