நாமக்கல், பூங்கா சாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.
நாமக்கல், பூங்கா சாலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

நாளை சதுா்த்தி விழா: விநாயகா் சிலைகள் விற்பனை மும்முரம்

Published on

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நாமக்கல்லில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். கோயில்கள் மட்டுமின்றி தெருக்களிலும், முக்கியப் பகுதிகளிலும் பிரம்மாண்ட விநாயகா் சிலைகளை வைத்து மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை சிறப்பு பூஜை செய்து மக்கள் வழிபாடு நடத்துவா். அதன்பின் ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் சிலைகளை கரைப்பா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நாமக்கல், திருச்சி, சேலம், பெரம்பலூா், கரூா், தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வடிவில் சிறியது முதல் பெரிய அளவிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். ரூ. 50 முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலான சிலைகள் விற்பனையாகும்.

நாடு முழுவதும் சனிக்கிழமை விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் அதிக அளவில் விநாயகா் சிலைகளை வைத்து விற்பனை செய்கின்றனா். நாமக்கல் பூங்கா சாலை, கடைவீதி பகுதிகளில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு குறைவான விலையில் அழகிய விநாயகா் சிலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு வைத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com