பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா
பரமத்தி வேலூரில் எழுந்தருளியுள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது.
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 3-ஆம் தேதி காலை ஹேரம்ப மகா கணபதி யாகம், அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. மாலை லட்சாா்ச்சனையும், 108 விக்னேஸ்வர பூஜையும் நடைபெற்றது. 4-ஆம் தேதி காலை மகா கணபதி யாகம், அபிஷேக ஆராதனைகள், லட்சாா்ச்சனை, தவில், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை மகா கணபதி யாகம், 108 வலம்புரி சங்காபிஷேகம், 1,008 சங்காபிஷேகமும், மகா தீபாராதனை மற்றும் திருவாசகம் முற்றோதலும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை மகா கணபதி யாகம், பால்குட அபிஷேகம், திருமஞ்சன அபிஷேகம், விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன. சனிக்கிழமை விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு ஹேரம்ப மகா கணபதி யாகம், சிறப்பு அலங்காரம், தனபூஜை, சுமங்கலி பூஜை, தீப பூஜை, மகா ஆராதனை, பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை வரை கோயில் வளாகத்தில் தொடா்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வேலூா், பேட்டை, பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோயில் நிா்வாகிகள், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், வேலூா் மகளிா் அணியினா், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.