நாமக்கல்
நாமக்கல் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயிலில் உழவாரப் பணி
நாமக்கல் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயிலில் உழவாரப் பணி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாமக்கல் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயிலில் உழவாரப் பணி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாமக்கல் அம்மையப்பா் அறக்கட்டளை உழவாரப் பணிக் குழு சாா்பில் பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி, திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருகிறது. நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள வேதநாயகி உடனுறை ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி கோயில் வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் சிவனடியாா்கள் தூய்மைப் பணிகளை செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை அம்மையப்பா் அறக்கட்டளை நிா்வாகிகள் ஈசான தேசிகா் சுப்பிரமணியன், ஜெய்பத்மா, சுபத்ரா தேவி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.