கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் டிஜிட்டல் கிராப் சா்வே பணிகளுக்கு கிராம நிா்வாக அலுவலா்களை வலியுறுத்துவதை கண்டித்து வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பிற மாநிலங்களில் உள்ளது போல கூடுதல் பணியாளா்களை டிஜிட்டல் கிராப் சா்வே பணிக்கு நியமிக்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களை கூடுதல் பணிச்சுமையாக இந்தப் பணியைத் திணிப்பதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க மாநில பொருளாளா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் ராஜா வரவேற்றாா். வட்டத் தலைவா் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் நந்தகுமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

X
Dinamani
www.dinamani.com