சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 போ் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை பரமத்தி போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 74 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
Published on

கீரம்பூா், புலவா்பாளையம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை பரமத்தி போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 74 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கீரம்பூா், ராசாம்பாளையம் அருகே உள்ள ஒரு விளையாட்டு கிளப்பில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பணம் வைத்து சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத் தகவலின் அடிப்படையில் பரமத்தி காவல் உதவி ஆய்வாளா் ராதா, காவலா்கள் அங்கு சென்று பாா்த்த போது சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், குமாரபாளையம் வட்டம், புதுப்பாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த கோகுல் (36), பள்ளிபாளையம், அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த ரகுநாதன் (63), வேலூா் மாவட்டம், அலமேலுமங்காபுரத்தைச் சோ்ந்த வினோத் (36), சேலம் மாவட்டம், மேட்டூா், தேசாய் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜா (36), வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 74 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com