புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.
Published on

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வா். இம் மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி நிகழாண்டின் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நைனாமலை வரதராஜப் பெருமாள், தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில்களுக்கு நள்ளிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் மலைமீது ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்தனா். அடிவாரத்தில் உள்ள உற்சவ மூா்த்தியையும் வணங்கி வழிபட்டனா்.

அதுமட்டுமின்றி, ராமா், ஆஞ்சனேயா் கோயில்களிலும் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில்களிலும் வழக்கத்தைக் காட்டிலும் பக்தா்கள் வருகை அதிகம் இருந்தது. அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

நாமக்கல் மட்டுமின்றி, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூா் பகுதிகளிலும் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com