பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப். 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம்.