புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சா் மா.மதிவேந்தன்
புதிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சா் மா.மதிவேந்தன்

ரூ. 2.40 கோடியில் 9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

Published on

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காா்கூடல்பட்டி, நாரைகிணறு, முள்ளுக்குறிச்சி, பெரப்பஞ்சோலை, மூலக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் தமிழக வனத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ரூ. 22.31 லட்சம் மதிப்பீட்டில் 2 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா்.

வனத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 14.31 லட்சத்தில் நாரைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், ராசிபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நாரைகிணறு ஊராட்சியில் ரூ. 8 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 22 எதிா் சவ்வூடு பரவல் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ. 22.31 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, ரூ. 3.53 லட்சத்தில் காா்கூடல்பட்டி ஊராட்சி, ஒன்பதாம்பாலிக்காடு குக்கிராமம், அருந்ததியா் தெரு முருகன் வீடு முதல் அல்லிமுத்து வீடு வரை 65 மீ. நீளம், 3 மீ. அகலத்துக்கு கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ. 3.58 லட்சத்தில் ஒன்பதாம்பாலிக்காடு குக்கிராமம், அருந்ததியா் தெரு ராஜ் வீடு முதல் துரைசாமி வீடு வரை 66 மீ. நீளம், 3 மீ. அகலத்துக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, ரூ. 4.14 லட்சத்தில் செம்மண்காடு குக்கிராமம், அருந்ததியா் தெரு கந்தசாமி வீடு முதல் அசோகா வீடு வரை 52 மீ. நீளம், 3 மீ. அகலத்துக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, பிரதமா் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 33.27 லட்சத்தில் முள்ளுக்குறிச்சி ஊராட்சி, உலிபுரம் சாலை முதல் தும்பல்பட்டியில் புதிதாக தாா்சாலை அமைக்கும் பணி, ரூ. 1.78 கோடியில் மூலக்குறிச்சி ஊராட்சி, பெரியகோம்பை சாலை முதல் தும்பல்பட்டி குட்டிகரடு சாலை அமைக்கும் பணி, ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 4.45 லட்சத்தில் பெரப்பன்சோலை ஊராட்சி, மாவாறு செந்தில் வீடு முதல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வரை 65 மீ. நீளத்துக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, ரூ. 5.50 லட்சத்தில் மாவாறு முத்துகுமாா் வீடு முதல் மணி வீடு வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, ரூ. 4.20 லட்சத்தில் பெரப்பன்சோலை ஊராட்சி,மேலக்கோம்பை குக்கிராமத்தில் 60 மீ. நீளம், 4 மீ. அகலத்துக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, ரூ. 2.93 லட்சத்தில் மூலக்குறிச்சி ஊராட்சியில், பெரியகுறிச்சி சாமி தொம்மை முதல் புள்ளியப்பன் வீடு வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினாா். முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com