நாமக்கல்
திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி மைய கலந்தாய்வு நிகழ்ச்சி
திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நோ்முக பயிற்சி மைய பேராசிரியா்கள், அமைப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நோ்முக பயிற்சி மைய பேராசிரியா்கள், அமைப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது குருமகா சந்நிதானம் அருளாசி வழங்கினாா். தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேராசிரியா்கள், அமைப்பாளா்கள் கலந்து கொண்டு சைவ சித்தாந்த வகுப்பு நடத்தும் முறைகள் குறித்து ஆலோசித்தனா். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை இயக்குநா் கந்தசாமி, அமைப்பாளா் செல்வராஜன், அம்பலத்தரசு மற்றும் அருள்நெறி வார வழிபாட்டு மன்றத்தாா்கள் செய்திருந்தனா்.