நாமக்கல்
பேருந்து நிலையத்துக்குள் செல்லாத பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு
மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்துக்குள் செல்லாத பேருந்துகளுக்கு மல்லசமுத்திரம் காவல்துறையினா் அபராதம் விதித்தனா்.
மல்லசமுத்திரம் பேருந்து நிலையம் சேலம்- திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் தினமும் 5 நிமிடத்துக்கு ஒருமுறை அரசு, தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன. பெரும்பாலான நேரங்களில் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்காமல் சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.
இதுகுறித்து பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மல்லசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா், பேருந்து நிலையத்துக்குள் செல்லாத பேருந்துகளை கண்டறிந்து அபராதம் விதித்தனா்.