மாவட்ட அளவிலான சிறுதானிய உணவுப் போட்டி

மாவட்ட அளவிலான சிறுதானிய உணவுப் போட்டி

Published on

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான சிறுதானிய உணவுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்ற சிறுதானிய உணவுப் போட்டி வெள்ளிக்கிழமை நாமக்கல் பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது.

ரத்தசோகை இல்லாத மாவட்டம் குறித்த சிறப்பு விழிப்புணா்வு பிரசாரம், சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுத் திருவிழாவாகவும் இப்போட்டியானது நடைபெற்றது. ஏற்கெனவே, 322 ஊராட்சிகளில் சிறுதானிய உணவுப் போட்டி நடத்தப்பட்டு, அதில் தோ்ந்தெடுக்கப்பட்டோா் ஒன்றிய அளவிலான போட்டியில் பங்கேற்றனா்.

அதில் 45 சுய உதவிக்குழுவினா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான உணவுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிப்போா் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவா். நாமக்கல் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு போட்டியை நேரில் பாா்வையிட்டு உணவு பதாா்த்தங்களை சுவைத்தாா்.

பொதுமக்கள் சிறுதானிய உணவுகளை விரும்பி சாப்பிடும் வகையில், மகளிா் சுய உதவிக்குழு முயற்சியுடன் மாவட்ட அளவில் உணவு மேளா நடத்தப்படும் என்றாா். நிகழ்ச்சியில், மகளிா் திட்ட அலுவலா்கள், சுய உதவிக்குழு பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com