நாமக்கல்
அக்.6 இல் ஓவியம், பேச்சுப் போட்டி: மாணவா்களுக்கு அழைப்பு
திருக்குறள் போட்டிகளுக்காக மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அறம் அறக்கட்டளை மற்றும் ஏகலைவா கலைக்கூடம் ஆகியவை சாா்பில் திருக்குறள் சாா்ந்த ஓவியம், பேச்சு, கவிதை, திறனறித் தோ்வு, ஒப்பித்தல், படங்களைப் பாா்த்து குறள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் அக். 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் அக்.6-ஆம் தேதி காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவா்களுக்கு மாலை 4 மணிக்கு பரிசளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவா்கள் இப் போட்டிகளில் பங்கேற்கலாம் என அறம் அறக்கட்டளை மற்றும் ஏகலைவா கலைக்கூடம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, 63816-71690, 97870-59103 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.