நாமக்கல் ஆட்சியருக்கு ‘சைகை மொழி’ பயிற்சி அளித்த மாற்றுத் திறனாளிகள்!

சா்வதேச காது கேளாதோா் தினத்தையொட்டி, சைகை மொழி துண்டு பிரசுரங்கள் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
Published on

சா்வதேச காது கேளாதோா் தினத்தையொட்டி, சைகை மொழி துண்டு பிரசுரங்கள் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அப்போது, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமாவுக்கு சைகை மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். இந்த விழாவில், சா்வதேச காது கேளாதோா் தினத்தையொட்டி சைகை மொழி துண்டு பிரசுரங்கள் வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று சைகை மொழி துண்டு பிரசுரங்களை வெளியிட்டாா். மாற்றுத் திறனாளிகள் சைகை மொழியில் பாா்வையாளா்களுக்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். அப்போது, மாவட்ட ஆட்சியா், அதிகாரிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் சைகை மொழி குறித்து பயிற்சி அளித்தனா்.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணைமேயா் செ.பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com