நாமக்கல்லில் காவல் துறை அதிகாரிகளிடம் நீதிபதி இரண்டாம் கட்ட விசாரணை

ஏடிஎம் கொள்ளையா்களால் தாக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம், குமாரபாளையம் நீதிபதி திங்கள்கிழமை இரண்டாம் கட்டமாக விசாரணை மேற்கொண்டாா்.
Published on

நாமக்கல்: ஏடிஎம் கொள்ளையா்களால் தாக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம், குமாரபாளையம் நீதிபதி திங்கள்கிழமை இரண்டாம் கட்டமாக விசாரணை மேற்கொண்டாா்.

கேரள மாநிலம், திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் கொள்ளையடித்து தப்பிய கும்பலை, நாமக்கல் மாவட்ட காவல் துறையினா் வெப்படை அருகே மடக்கிப் பிடித்தனா். அப்போது, கொள்ளையா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், கொள்ளையன் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா். 5 போ் கைது செய்யப்பட்டனா். இதில், குமாரபாளையம் காவல் ஆய்வாளா் தவமணி, மல்லசமுத்திரம் உதவி ஆய்வாளா் ரஞ்சித்குமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவா்களிடம், குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவா் டி.மாலதி வெள்ளிக்கிழமை இரவு விசாரித்தாா். அதன்பிறகு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொள்ளையன் முகம்மது ஹஸ்ரு (எ) அஜா்அலியை சந்தித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விசாரித்தாா்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த நீதிபதி டி.மாலதி, மீண்டும் காவல் ஆய்வாளா் தவமணி, உதவி ஆய்வாளா் ரஞ்சித்குமாா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com