குமாரபாளையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
குமாரபாளையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்

குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் அ.பழனிவேல் தலைமை வகித்தாா். ஊராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் 40 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க வேண்டும். குமாரபாளையத்தை அடுத்த தட்டாங்குட்டை மாற்றுத் திறனாளிகள் குடியிருப்பில் காலி இடங்களை நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் மாற்றுத் திறனாளிகள் கடை வைத்து நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

குமாரபாளையம் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்த தொகையில் கடை வைக்க அனுமதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டப்பட்ட கழிப்பிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com