மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

Updated on

பரமத்தி வேலூா் அருகே அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பாண்டமங்கலம், வடக்கு தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (44), கடந்த 15 ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். பரமத்தி அருகே சேலம் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை இவா் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சதீஷ்குமாா் கீழே விழுந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், சதீஷ்குமாா் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

புகாரின் பேரில் பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com