நாமக்கல்
அரசு மதுக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகளுக்கு ஜன.15, 26 ஆகிய இரு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் ஜன. 15-ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 26-இல் குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும். விதிகளை மீறி மதுக் கடைகளைத் திறந்தாலோ, மறைமுகமாக மது வகைகளை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.