பரமத்தி வட்டாரத்தில் மத்திய, மாநில திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தியில் வேளாண்மை இணை இயக்குநா் மற்றும் துணை இயக்குநா் மத்திய மற்றும் மாநில திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநா் கலைச்செல்வி மற்றும் வேளாண்மை துணை இயக்குநா் கவிதா ஆகியோா் மத்திய மற்றும் மாநில திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமனின் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தூய மல்லி நெல் வயலை ஆய்வு செய்தனா். மற்றும் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் எள் தொகுப்பு செயல் விளக்கத் திடல் வயல்களை ஆய்வு செய்தனா். பாரம்பரிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் மண்புழு உர படுக்கையை ஆய்வு செய்தனா். மேலும் வேளாண் கிடங்கில் உள்ள இடு பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குநா் சுதா, வேளாண்மை அலுவலா் மோகனப்பிரியா, துணை வேளாண்மை அலுவலா் குப்புசாமி மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள் உடன் இருந்தனா்.