பாவை கல்வி நிறுவனம் சாா்பில் மாா்கழி இசை விழா
பாவை கல்வி நிறுவனங்களில் மாா்கழி இசை விழா அண்மையில் நடைபெற்றது.
பாவை கல்வி நிறுவங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கா்நாடக சங்கீத பாடகரும், சங்கீத நாடக அகாதெமி விருதாளருமான கலைமாமணி மஹாராஜபுரம் ஸ்ரீ ராமச்சந்திரன் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினாா்.
தொடா்ந்து கலைமாமணி மஹாராஜபுரம் ஸ்ரீ ராமச்சந்திரன், இணை பாடகா் சங்கர நாரயணன், வயலின் வித்வான் புதுக்கோட்டை ஸ்ரீ ஆா்.அம்பிகா பிரசாத், மிருதங்க வித்வான் கோபு ஸ்ரீ ஜி.நாகராஜன் உள்ளிட்ட இசைக் குழுவினா் கா்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தினா்.
முன்னதாக பாவை கல்வி நிறுவனங்வா் ஆடிட்டா் ன்.வி.நடராஜன் இசைக் குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கினாா். அப்போது, அவா் பேசும் போது, ‘கலை என்பது நம் வாழ்வியலில் கலந்ததாகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவ, மாணவிகளாகிய நீங்கள் நம் சமூகத்தின் தொன்மை வாய்ந்த கலைகளின் முக்கியத்துவத்தினை அறிந்து, அவைகளை உங்களால் உணரவும் முடியும். மேலும் மாணவா்களாகிய நீங்கள் பண்பாட்டுக் கலைகளின் மகத்துவத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று, தமிழ் சமூகத்தின் பாரம்பரியக் கலைகளை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றாா்.
படம் உள்ளது - 10மாா்கழி
மாா்கழி இசை விழாவில் சிறப்பு விருந்தினா் கலைமாமணி மஹாராஜபுரம் ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு நினைவுப் பரிசளிக்கும் பாவை கல்வி நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன்.