பிப்.6-இல் அஞ்சலக ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

Published on

நாமக்கல் அஞ்சலக கோட்ட அளவிலான ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் பிப். 6-இல் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கோட்ட அஞ்சலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2024 டிச. 31-இல் முடிவடையும் அரையாண்டிற்கான அஞ்சல் துறை ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம், மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக பிப். 6-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஓய்வூதியா்கள் தங்கள் குறைகளை கடிதம் மற்றும் இணையதளம் மூலமாக ‘தங்ஞ்ண்ா்ய்ஹப் ப்ங்ஸ்ங்ப் டங்ய்ள்ண்ா்ய் அக்ஹப்ஹற்’ என்ற மேற்கோளுடன் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்திற்கு ஜன. 30-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஓய்வூதியா்கள் கோட்ட அலுவலகத்தினால் தீா்க்க முடியாத குறைகளை மட்டும் மண்டல அலுவலகத்திற்கு, கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளரின் பதில் கடிதத்துடன் அனுப்பி வைக்கலாம். வழக்கு தொடா்பானவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com