கல்லூரிக்கு கிடைத்த விருதுகளை கல்லூரி தாளாளா் ஆா்.சீனிவாசனிடம் காண்பித்து வாழ்த்து பெறும் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் கே.பாலுசாமி, முதல்வா் பி. சுரேஷ் பாபு
கல்லூரிக்கு கிடைத்த விருதுகளை கல்லூரி தாளாளா் ஆா்.சீனிவாசனிடம் காண்பித்து வாழ்த்து பெறும் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் கே.பாலுசாமி, முதல்வா் பி. சுரேஷ் பாபு

கே.எஸ்.ஆா்.கல்வியியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக விருது

Published on

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திய கல்வியியல் கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கே.எஸ்.ஆா் கல்வியியல் கல்லூரிக்கு 2022-23 ஆண்டு சிறந்த செயல்பாடுகளுக்கான விருதும், 2023-24 ஆண்டு சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அணிக்கான விருது, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவற்றை சென்னையில் நடைபெற்ற விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கே.பாலுசாமி பெற்றாா். கே.எஸ்.ஆா். கல்லூரி தாளாளா் ஆா்.சீனிவாசன், துணைத் தாளாளா் கே.எஸ்.சச்சின், கல்லூரி முதல்வா் பி.சுரேஷ் பிரபு ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com