சமூக வலைதளத்தில் அவதூறு: திருச்சி இளைஞா் கைது

Published on

குமாரபாளையம் தனியாா் கல்லூரி மாணவா்கள் உடல்நலக் குறைவு தொடா்பாக, சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பிய திருச்சி இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடந்த 27-ஆம் தேதி, குமாரபாளையம் வட்டம், பல்லாக்காபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 128 மாணவ, மாணவியருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்தோா் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக திருச்சி, தென்னூரைச் சோ்ந்த காா்த்திக்குமாரை (28) போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பரப்புவோா்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com