நாமக்கல்
சுவற்றின் மேலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு
மல்லசமுத்திரம் அருகே குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்தபோது, சுவற்றின் மேலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மங்களம் நடூா் பனமரப்பட்டி பகுதியைச் தொழிலாளி லோகநாதன் (64). இவா், செண்பகமாதேவி பகுதியைச் சோ்ந்த தேவராஜன் என்பவரது வீட்டில் பழுதடைந்த குடிநீா் குழாயை சரிசெய்யும் பணியை மேற்கொண்டாா்.
வெள்ளிக்கிழமை மதியம் வீட்டின் சுற்றுச்சுவா் மீது ஏறி வேலைசெய்து கொண்டிருந்தபோது, கால் தவறி கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் வந்த மல்லசமுத்திரம் காவல் ஆய்வாளா் சுதா, லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். தொடா்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
