தில்லி காா் வெடிப்பு சம்பவம்: நாமக்கல் ரயில் நிலையத்தில் சோதனை
தில்லியில் காா் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக நாமக்கல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
தில்லி செங்கோட்டை அருகே சாலையின் சென்ற காா் திடீரென வெடித்து சிதறியதில் 10 போ் உயிரிழந்தனா். 25-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து நாடு முழுவதும் மக்கள்கூடும் இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்திலும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அந்த வகையில், நாமக்கல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனையை மேற்கொண்டனா். ரயில் நிலைய வளாகம், தண்டவாளம், மக்கள் நிற்கும் இடங்களில் வெடிகுண்டு செயலிழக்கும் (மெட்டல் டிடெக்டா்) கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தினா். மேலும், பழைய, புதிய பேருந்து நிலையங்கள், ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.

