நாமக்கல்லில் நாளை மாரத்தான் போட்டி

அண்ணா பிறந்த நாளையொட்டி, நாமக்கல்லில் மாரத்தான் போட்டி சனிக்கிழமை (நவ.14) நடைபெறுகிறது.
Published on

அண்ணா பிறந்த நாளையொட்டி, நாமக்கல்லில் மாரத்தான் போட்டி சனிக்கிழமை (நவ.14) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெறுகிறது. ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் தொடங்கும் இப்போட்டியில் 17 வயது முதல் 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள்- 8 கி.மீ தொலைவுக்கும், பெண்கள் 5 கி.மீ தொலைவுக்குமான ஓட்டத்தில் பங்கேற்கலாம்.

அதேபோல 25 வயதுக்கு அதிகமான ஆண்கள் 10 கி.மீ, பெண்கள் 5 கி.மீ தொலைவுக்கும் பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களில் வருவோருக்கு ரூ.1,000 காசோலைகளும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்போா் தலைமை ஆசிரியரிடமிருந்து கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதாா் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களை கொண்டுவர வேண்டும். முன்பதிவு மற்றும் தகவல் தொடா்புக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் பயிற்றுநா் வினோதினி என்பவரை 82203-10446 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். மேலும், போட்டி நாளன்று நேரடியாகவும் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com