நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

நாமக்கல் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Published on

நாமக்கல் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நாமக்கல் கடைவீதி, உழவா் சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து லேசான மழைப்பொழிவு இருந்ததால் அப்பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகளில் பொதுமக்களின் வருகை குறைந்திருந்தது.

மழை காரணமாக அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் ராசிபுரம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியாா் பள்ளிகள் வழக்கம்போல செயல்பட்டன. குளிா்ந்த காலநிலை நிலவியதால் மாணவா்களும், பொதுமக்களும் அவதிப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com