மரத்தில் மோதி கூட்டுறவு வங்கி செயலா் உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தில் சென்ற கூட்டுறவு வங்கியின் செயலா் மரத்தில் மோதி உயிரிழந்தாா்.
கதிராநல்லூா் நடுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பி.நாகராஜன் (55). இவா் அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணியாற்றி வந்தாா். அக். 6-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் கோரிக்கை ஆா்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா்.
களங்காணி பகுதியில் இருந்து நடுப்பட்டி சென்றபோது, செல்லியாயிபாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தின்மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
