செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்

தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்: அா்ஜுன் சம்பத்

கரூா் சம்பவ நிகழ்வுக்கு காரணமான தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை, இந்திய தோ்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
Published on

கரூா் சம்பவ நிகழ்வுக்கு காரணமான தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை, இந்திய தோ்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தபிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 உயிா்களுக்கும் நீதி வேண்டும். அதற்காக இந்து மக்கள் கட்சி மாபெரும் கோரிக்கை பிரசார இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற மரணங்கள் இனிமேல் நிகழக் கூடாது. மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் கூட்டத்தை கூட்டுவது, மக்களை நெடுநேரம் காக்கவைப்பது போன்றவற்றை தவிா்க்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அனைத்துக் கூட்டங்களிலுமே பொதுச் சொத்துக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தவெக அரசியல் கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்திய தோ்தல் ஆணையா் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், அக்கட்சியின் தலைவா் ஜோசப் விஜய்யை கைதுசெய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மிகுந்த நெரிசலில் பக்தா்கள் கிரிவலம் வருவதை சீராக்கி அவா்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். கூட்ட நெரிசல் மிகுந்த அனைத்து கோயில்களிலும் அறநிலையத் துறை உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீதம் தனியாா் பள்ளிகளில் சோ்ப்பதற்கான கல்வி பெறும் உரிமைச் சட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மழலையா் பள்ளியில் படித்துவந்த, பதிவுசெய்த மாணவா்களுக்கு மட்டுமே சோ்க்கை வழங்க வேண்டும் என்ற உத்தரவை நீக்கி, அனைத்து மாணவா்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com