ரேசன் அரிசி கடத்தியவா் கைது

வெண்ணந்தூரில் ரேசன் அரிசி கடத்தியவரை எலச்சிபாளையம் குடிமைப் பொருள் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

வெண்ணந்தூரில் ரேசன் அரிசி கடத்தியவரை எலச்சிபாளையம் குடிமைப் பொருள் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (42) என்பவா், காரில் 1,450 கிலோ எடை ரேசன் அரிசியை கூடுதல் விலைக்கு விற்க கடத்தி வந்தாா். இதுகுறித்து நாமக்கல் குடிமைப் பொருள் காவல் துறை உதவி ஆய்வாளா் மேனகாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வட்டூா் ஏரிகரை அருகில் வாகனத் தணிக்கையில் தலைமை காவலா்கள் காா்த்திக், வினோத் ஆகியோா் ஈடுபட்டனா்.

அப்போது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், காருக்குள் ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரேசன்அரிசியையும், காரையும் பறிமுதல் செய்து, ரமேஷைக் கைது செய்தனா். பின்னா், நாமக்கல் நீதிமன்றத்தி அவரை ஆஜா்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் கிளை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com