நாமக்கல்
பணம் வைத்து சூதாடிய 7 போ் கைது
பரமத்தி வேலூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.
பரமத்தி வேலூரில் உள்ள தனியாா் கல்லூரிக்கு எதிரில் உள்ள தென்னந்தோப்பில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், வேலூா் காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு சிலா் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனா்.
போலீஸாா் அவா்களை சுற்றிவளைத்து 7 பேரையும் கைது செய்தநா். பின்னா், அவா்களிடமிருந்து ரூ. 20 ஆயிரத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
