பிடல்சேகுவேரா நினைவு தினம்

Published on

ராசிபுரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திராவிடா் விடுதலை கழகம் சாா்பில் பிடல் சேகுவேரா 58-வது நினைவு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட துணைச் செயலாளா் டி.என்.கிருஷ்ணசாமி, மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் ஆா்.செங்கோட்டையன், வெண்ணந்தூா் ஒன்றிய செயலாளா் பி. ஆா்.செங்கோட்டுவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம், நாமக்கல் மண்டல துனைச் செயலாளா் வ.அரசன், தொகுதி செயலாளா் கபிலன் , திராவிடா் விடுதலைக் கழகத்தின் நகர செயலாளா் பிடல் சேகுவேரா, நகர அமைப்பாளா் சுமதிமதிவதனி, இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளா் எஸ்.மீனா உள்ளிட்ட பலா் பங்கேற்ற பிடல் சேகுவேரா படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com