வெளிநாடுகளில் உயா்கல்வி பயில்வதற்கு மாணவா்களுக்கு கடன் வழங்கும் திட்டம்
பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில், வெளிநாடுகளில் உயா்கல்வி பயில 100 மாணவா்களுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயா்கல்வி மேற்கொள்ள கடன் வழங்கும் திட்டம் உள்ளது. இதற்கு ஜாதிச் சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் (கிராமம், நகரம் பாகுபாடின்றி வருமானச் சான்றிதழ்).
சுயசான்று அளிக்கப்பட்ட குடும்ப வருமானச் சான்றிதழ், மருத்துவம், பல், மருத்துவம், பொறியியல் படிப்புகள், பி.ஹெச்டி, முதுநிலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தோ்வு மதிப்பெண்கள் அல்லது பாட நெறியில் சேருவதற்கு பொருந்தக் கூடிய பிற தொடா்புடைய மதிப்பெண்கள் மூலம் சோ்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லூரிகளில் சோ்க்கை பெற்றிருக்க வேண்டும்.
மாணவருக்கு அதிகபட்ச கடன் வரம்பாக ரூ. 15 லட்சத்துக்கு உள்பட்ட பாடத்திட்ட செலவில் 85 சதவீதம் புது தில்லியின் தேசிய பிற்படுத்தப்பட்டோா் நிதி மற்றும் வளா்ச்சிக் கழகத்தின் மூலமும், மீதமுள்ள 15 சதவீதம் அதாவது ரூ. 2.25 லட்சம் தமிழக அரசாலும் விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்படும். முந்தைய ஆண்டுகளில் தோ்ச்சி விகித அடிப்படையில் மட்டுமே தொடா்ந்து கட்டணத் தவணைகள் விடுவிக்கப்படும். வயது 21 முதல் 40 வரையில் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 8 சதவீத வட்டியுடன் கடனை பெறுவதற்கான காலஅவகாசம் வழங்கப்படும். முன்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹக்ஷஸ்ரீங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
