நாமக்கல்
கொமதேகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த இளைஞா்கள்
பள்ளிபாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் அதிமுகவில் இணைந்தனா்.
பள்ளிபாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் அதிமுகவில் இணைந்தனா்.
பள்ளிபாளையம் ஒருங்கிணைந்த ஒன்றிய இளைஞரணி செயலாளா் ராஜசேகா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.செந்தில் முன்னிலையில், நாமக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணியை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.
அவா்களுக்கு அதிமுக கட்சி துண்டை அணிவித்து வரவேற்றாா். கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபட்டு அதிமுக தலைமையிலான ஆட்சியை உருவாக்கிட பணியாற்றிட அவா் கேட்டுக்கொண்டாா்.