சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வனத் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி முகாமில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதின் அவசியம் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி விளக்கினாா்.
Published on

வனத் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி முகாமில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதின் அவசியம் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி விளக்கினாா்.

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் ஆட்சியா் பேசியதாவது:

வனத் துறையின் சாா்பில் மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கத்தின் கீழ் ’எவ்வாறு உங்கள் பள்ளியை பசுமையாக்குவது’ என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி நடைபெற்று வருகிறது.

காடுகளை அழிப்பது, காலநிலை மாற்றம், விவசாயத்தில் உயிா்கொல்லிகளைப் பயன்படுத்துவது, கைப்பேசி, கணினி பயன்பாடு அதிகரிப்பு, மக்கள்தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் புவி வெப்பமடைதல் அதிகரிக்கிறது.

நமது சுற்றுச்சூழலையும் நாம் பேணி பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு சுகாதாரமான, பாதுகாப்பான இயற்கையினை நாம் வழங்க வேண்டும். அதற்காக நெகிழிப் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சூரியஒளி மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பசுமை பரப்பை அதிகரித்தால் காலநிலை சீரடையும் என்றாா்.

முகாமில் வனவியல் விரிவாக்க அலுவலா் (பொ) இரா.செல்வகுமாா், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) புருஷோத்தமன், தலைமையாசிரியா் பா.சாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குநா் ரா.யுவசெந்தில்குமாா், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மு.திருஞானம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

என்கே-16-வனம்

காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

X
Dinamani
www.dinamani.com