நாமக்கல்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
பரமத்தி வேலூரை அடுத்த மானத்தியில் உள்ள கோழிப் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூரை அடுத்த மானத்தியில் உள்ள கோழிப் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
வலையப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் வைரமணி (57), இவா் மானத்தியில் பழனிசாமிக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் உள்ள இயந்திரத்தில் புதன்கிழமை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததால் பலத்த காயமடைந்த வைரமணியை சக பணியாளரான அகிலன் மீட்டு வேலகவுண்டம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா்.
பின்னா், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வைரமணி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து வைரமணியின் மனைவி கீதாராணி அளித்த புகாரின்பேரில் வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
