நாமக்கல்
60 கிலோ சுரபி ரக பருத்தி ரூ.7769க்கு ஏலம்
மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 60 கிலோ சுரபி ரக பருத்தி அதிகபட்சமாக ரூ. 7769க்கு விற்பனையானது.
மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 60 கிலோ சுரபி ரக பருத்தி அதிகபட்சமாக ரூ. 7769க்கு விற்பனையானது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. கருமனூா், மதியம்பட்டி, மாமுண்டி, ஆத்துமேடு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 161 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனா்.
இதில் சுரபி ரக பருத்தி 60 கிலோ எடை கொண்ட மூட்டை ரூ.6409 முதல் ரூ.7769 வரையிலும், பி.டி. ரக பருத்தி மூட்டை ரூ.1109 முதல் ரூ.7711 வரையிலும், கொட்டு ரகம் மூட்டை ரூ.3819 முதல் ரூ.4519 வரையிலும் விற்பனையானது.