பரமத்தி வேலூரில் ரூ.18.16 லட்சத்து கொப்பரை ஏலம்

பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.18 லட்சத்து 16 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
Published on

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.18 லட்சத்து 16 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 12 ஆயிரத்து 830 கிலோ கொப்பரையை விசாயிகள் கொண்டுவந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ.230.10 க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.212.15க்கும், சராசரியாக கிலோ ரூ.226.10க்கும் ஏலம் போனது.

இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 210.69க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.140.99க்கும், சராசரியாக கிலோ ரூ. 208.99க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 28 லட்சத்து 23 ஆயிரத்து 993 க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

அக்.16 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 820 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 218.90க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.205.99க்கும், சராசரியாக கிலோரூ.216.39க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.204.89க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.141.99க்கும், சராசரியாக கிலோ ரூ.195.69க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.18 லட்சத்து 16 ஆயிரத்து 831க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com